தமிழ் அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும்! – செல்வம் எம்.பி. வலியுறுத்து

உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாத்திரமல்ல அவர்களின் உறவினர்களும், நாங்களும் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே, அவர்களைப் பொதுமன்னிப்பின் கீழ் அல்லது புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.

Share the Post

You May Also Like