எங்கள் உரிமை, அதிகாரத்தை அனுபவிக்க இடமளியுங்கள்! சபையில் சம்பந்தன் காட்டம்

தற்போதைய அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், தற்போது அந்தப் பணிகள் கைவிடப்பட்டு உள்ளதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எதற்காக அந்தப் பணிகள் கைவிடப்பட்டன என்று தெரியவில்லை எனக் கூறினார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு,நேற்று இடம்பெற்றது.. இதற்கான இறுதி விவாதத்தில் கலந்​து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு என்றும் எங்கள் அதிகாரம், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share the Post

You May Also Like