ஆசிரியர்களே எமது எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்

ஆசிரியர்களே எமது எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் , கிளி பளை வேம்படுகேனி சி சி தா க பாடசாலையின் ஆசிரியர் திருமதி சின்னப்பிள்ளை குலவீரசிங்கம் அவர்களின் மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குபவர்களும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
 பாடசாலை அதிபர் ஜீவரத்தினம் தலைமையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் .
 நல்ல பிரயைகளை உருவாக்குவதற்கு பாடுபடுபவர்களும் அதிகமான பங்களிப்புக்களை வழங்குபவர்களும் ஆசிரியர்களே இவர்களே எமது மாணவர்களுக்கு எமது இனம் மீதான அக்கறையை ஏற்படுத்துபவர்கள் அத்துடன் எமது இனத்தின் வரலாறுகளை எதிர்கால சந்ததிகளிற்கு கடத்தவேண்டியவர்களாவார்கள் என குறிப்பிட்டயுடன்  திருமதி சின்னப்பிள்ளை குலவீரசிங்கம் நீண்டகாலம் வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்தார் இந்நிகழ்வில் வலயக்கல்வி உதவிப்பணிப்பாளர்,பளை கோட்ட கல்வி பணிப்பாளர்,
பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றார் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
Share the Post

You May Also Like