யாழ் நகர் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ் நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பாதாளசாக்கடை திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த (09) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது பேசப்பட்டவிடயங்கள் தொடர்பில் முதல்வர் கருத்து வெளியிடும் போது ‘கடந்த ஒக்டோபர் மாத சந்திப்பில் நடைபெற்ற கூட்டத்தின் முன்;னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், மேலும் பாதாளசாக்கடைத் திட்டங்களின் ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த வருடம் 2020 ஆம் ஆண்டு ஆரம்ப பகுதியில் நடைமுறைக்கு வருவதற்கான அமைப்பில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றது’ என்றும் குறிப்பிட்டார்.
இக் கலந்துரையாடலில் நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் பிரதம பொறியியலாளர் திரு.விஜயகாந்த், பாதாளசாக்கடைத்திட்டத்திற்கான நிதி வழங்குனர்களின் சார்பில் அதன் பிரதிநிதிகள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
Share the Post

You May Also Like