கூட்டமைப்பு அரசிற்கு ஆதரவளிப்பதற்கான காரணம் – சிவமோகன் விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது, மீண்டும் ஒரு அராஜகமான ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தற்போதுள்ள அரசாங்கம் இல்லாதுபோனால் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே ஆட்சிக்கு வரும்.

இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது அரசை காப்பாற்ற அல்ல. மீண்டும் மஹிந்த தலைமையிலான அராஜக அரசு ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே நாம் அவ்வாறு ஆதரவு வழங்குகின்றோம்.

இதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீண்டுமொருமுறை அராஜக அரசை கொண்டுவர மக்களும் அனுமதிக்கமாட்டார்களென தெரிவித்திருந்தார்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like