யாழ் மாநகர முதல்வரின் விகாரி வருட வாழ்த்துச் செய்தி

சித்திரை புத்தாண்டே சிறப்புடன் வருக,
இன்று மலரும் விகாரி வருடம் எம் மத்தியில் உள்ள வேற்றுமைகளை நீக்கி, ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். கடந்த காலங்களில் நடந்தேறிய துன்பங்களையும், துயரங்களையும் மறந்திடுவோம்.
விகாரியை தொடர்ந்துவரும் காலம்இ மக்கள் மனதில் மகிழ்வுடையதாக அமையட்டும் என வாழ்த்தி எனது புதுவருட வாழ்த்தினைத் தெரியப்படுத்துகின்றேன்.
சித்திரை புத்தாண்டு இலங்கையில் வாழும் ஈரின மக்களாகிய தமிழர்களில் இந்துக்களுக்கும், சிங்களவர்களுள் புத்தமதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொதுப் பண்டிகையாக உள்ளது. எனவே இது ஒரு தேசிய திருநாளாகும். எனவே நாடெங்கும் அமைதி நிலவ வேண்டுமென இந்த புனித நாளில் இறைவனை வேண்டுகிறேன்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
Share the Post

You May Also Like