எமது பாரம்பரியங்களை இளைஞர்களே பாதுகாக்கவேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

எமது பாரம்பரியங்களை இளைஞர்களே பாதுகாக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பளை மாசார் வளர்மதி விளையாட்டுக்கழகம் நேற்று நடாத்திய கலைஞர்களை மதிப்பளித்தல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும்இங்கு அவர் கருத்துக்களை வழங்கும்போது எமது இனத்தின் இருப்பு என்பது நிலம் , கலை கலாச்சாரம் , பண்பாடு விழுமியங்கள் போன்ற தனித்துவங்களிலே தங்கியுள்ளது

எனவே எமது இனத்தை அளிக்கவேண்டுமானால் எமது தனித்துவமான அடையாளங்களை அளிக்கவேண்டும் இது தொடர்ச்சியாக சிங்கள அரசுகளால் இடம்பெற்று வருகின்றது ஆகவே இவற்றை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இளைஞர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றார். இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் , உபதவிசாளர் கஜன் , கிளிநொச்சி மாவடட உதவி திடடமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் , பளை போலீஸ் பொறுப்பதிகாரி , பிரதேச கலைஞர்கள் கிராம அலுவலர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

Share the Post

You May Also Like