இரத்தினபுரம் கிருஷ்ணருக்கு வீதி – சிறிதரனின் பெருமுயற்சி

கிளிநொச்சி நகரின் மத்திய வைத்தியசாலைக்கு பின்புறமாக அமைந்துள்ளதும், மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் பாதிக்கப்பட்டிருந்த இரத்தினபுரம் கிருஷ்ணன் ஆலய வீதியினை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

2018 ஆம் ஆண்டு ஊரெழுச்சி வேலைத் திட்டத்தின் மூலம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இரண்டு மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது, தற்பொழுது மேலும் இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து இந்த வீதி நிரந்தர வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது

மிகவும் நீண்ட காலமாக வெள்ளம் பாய்ந்து ஓடும் வாய்க்கால் போன்று காணப்பட்ட இவ்வீதியினை புனரமைத்து தருமாறு இரத்தினபுரம் மக்களும், பொது அமைப்புகளும் இணைந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த வீதிப்புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

வீதிப்புனரமைப்பு வேலைகளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

வீதியை புனரமைக்கும் அதே வேளை அவ் வீதியில் அமைந்துள்ள கிருஷ்ணன் ஆலய புனரமைப்புக்காகவும் ஐந்து இலட்சம் ரூபாய் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது

அதே வேளை இரத்தினபுரத்தை சூழ்ந்து பாய்கின்ற வெள்ள நீர் கால்வாய்கள் மற்றும் அவற்றை புனரமைப்பதற்கான மூலோபாய வேலைகள் குறித்தும் அப் பிரதேசத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கள ஆய்வுகளை மேற்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share the Post

You May Also Like