வவுனியாவில் தமிழரசு கட்சியின் வடக்கு , கிழக்கு இளைஞர் அணி மாநாடும் நிர்வாக தெரிவும்

இலங்கை தமிழரசு கட்சியின் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாக தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில்  தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் ப.சத்தியலிங்கம் தலமையில் நடைபெற்று வருகின்றது.

இவ் மாநாட்டில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா , ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன் , எஸ்.சிவமோகன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா , துரைரத்தினசிங்கம் , ஈ.சரவணபவன் மற்றும் கட்சியின் பொது செயலாளர் துரைராஜாசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழரசு கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சேர்ந்த பல மாவட்டங்களை சேர்ந்த பல இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவ் இளைஞர் அணி மாநாடு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like