தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு பிற்போடப்பட்டுள்ளது என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் 26ஆம், 27ஆம்,28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆயினும், நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ள அசாதாரண சூழ்நிலையில் கட்சியின் மாநாட்டைப் பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி தந்தை செல்வாவின் அஞ்சலி நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், பிற்போடப்பட்டுள்ள கட்சியின் மாநாடு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

Share the Post

You May Also Like