மகிழவெட்டுவான் வீட்டுத் திட்ட நிர்மானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக பா.உ ஸ்ரீநேசன் விஜயம்…

வீடமைப்பு அதிகார சபையின் கீழ் வவுணதீவு மகிழவெட்டுவான் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்காக நிர்மானிக்கப்படுகின்ற 14 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தின் வேலைப்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வேலைத் திட்டத்தினைப் பர்வையிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அப்பிரதேசத்திற்கு நேற்றைய தினம் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாச அவர்களின் வழிகாட்டலில் தமிழ்த் தேசழயக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களுக்கான வீடமைப்பு நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே விதத்தில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பிரதேசத்தில் பிரதேச செயலகத்தினால் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 14 பயனாளிளுக்கான தலா பத்து லெட்சம் ரூபா பெறுமதியிலான வீட்டுத் திட்டத் தொகுதிக்கான நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் நிர்மானப் பணிகளைப் பார்வையிடுவதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் இவ்விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share the Post

You May Also Like