பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் விடுகை நேரமும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை – ஆனல்ட்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி மாநகர எல்லைப் பகுதிக்குள் பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் விடுகை நேரமும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் எமது எதிர்க்கால சந்ததியான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைவதனை அனுமதிக்க முடியாத நிலையில் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வாகன உரிமையாளர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாத ஒன்றாகின்றது. இதன்போது மாநகர எல்லைக்குள் அதிக பாடசாலைகளும் அதிக மாணவர்களும் கொண்ட பகுதியாக உள்ள நிலையில் நில முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பாடசாலை நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் மாநகர எல்லைப் பகுதிக்குள் பார ஊர்திகள் , கண்டர்கள் , டிப்பர்கள் , இரு சக்கர உழவு இயந்திரங்கள் , சுற்றுலாப் பேரூந்துகள் , வடி வகை வாகனங்கள் எவையும் உட் பிரவேசிக்கவோ அல்லது வீதியோரம் நிறுத்தி வைப்பதற்கோ தடை விதிக்கப்படுகின்றது.

இவ் அறிவித்தலை மீறிச் செயல்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை சட்டத்தின் பால் மேற்கொள்ளும் உரித்தினை பொலிசார் மேற்கொள்வர்.

எனவே சட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இவ் அறிவித்தலை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளிற்கு ஒத்துழைக்க வேண்டும். என்றார்.

Share the Post

You May Also Like