குருநகர் மற்றும் கரையோரப்பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கள விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசேட களவிஜயம் ஒன்று கடந்த (7) மேற்கொள்ளப்பட்டது.

இவ் நேரடிக் கள விஜயத்தின் போது யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் உயர்திரு. எஸ். சுதர்சன், யாழ் மாநகர ஆணையாளர், கௌரவ யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை அதிகாரிகள், யாழ் பிரதேச செயலக அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இவ் விஜயத்தின் போது அங்கு ஒன்று கூடியிருந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழில் சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினர் தாம் தொழில் சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தமது தேவைகள்;, தமது குறைபாடுகள் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.

மக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொண்ட முதல்வர் மற்றும் பிரதேச செயலரினால் முன்னிலை அடிப்படையில் மேற்கொள்ளக்கூடிய திட்டங்களின் விபரங்கள் குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இறுதியாக குறித்த பகுதியின் அபிவிருத்தி மற்றும் கடற்றொழிலாளர்களின் தொழில் தேவைப்பாடுகளை நிவர்த்திப்பதற்கான ஒரு சில திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டு குறித்த திட்டங்களுக்கான நிதியை பெறக்கூடிய வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தாம் உரிய கவனம் எடுத்து குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதாக முதல்வர் மற்றும் பிரதேச செயலாளர் கலந்துகொண்டோரிடம் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post

You May Also Like