யாழ் பொதுநூலக அபிவிருத்தி தொடர்பில் முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல் 

யாழ் மாநகர பொதுநூலகத்தின் செயற்பாட்டுக்குழு கூட்டம் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் நேற்று (10) காலை 11.00 மணியளவில் பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ் பொது நூலகத்தின் பிரதான தேவைகள், குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும் நூலகத்தின் செயற்பாடடுக் குழுவை மீள புனரமைப்பது தொடர்பிலும், பொது நூலகத்தின் கிளை நூலகங்களின் நிலமை தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை அவர்கள், யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் யாழ் மத்திய கல்லூரியின் பிரதிநிதிகள், நூலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் ஊடகப்பிரிவு
Share the Post

You May Also Like