கரைச்சி பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் அடையாளமாக திகழ்கின்ற  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் கரைச்சி பிரதேச சபையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் விளக்கேற்றி, பேரினவாதிகளினால் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென பிராத்தித்துள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க வடக்கு- கிழக்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like