றிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரிக்கை

அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, மாகல்கந்தே சுதந்த தேரர், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Share the Post

You May Also Like