இளஞ்செழியனின் தந்தையின் இறுதி கிரியைகளில் மாவை பங்கேற்பு

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தையின் இறுதி கிரியைகளில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருந்தார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தை சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேலணையில் தகனம் செய்யப்பட்டது.

இந்த இறுதி கிரியைகளிலேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருந்தார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தை சதாசிவம் மாணிக்கவாசகர் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் கடந்த 9ஆம் திகதி காலமாகியிருந்தார்.

இதனையடுத்து அவரின் பூதவுடல் யாழ். கொக்குவில் மேற்கு, கேணியடியிலுள்ள அன்னாரின் புதல்வரான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையனின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு, பூதவுடல் அவர் பிறந்த இடமான வேலணைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு ஒரு சில மணித்தியாலங்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், சாட்டி இந்து மயானத்தில் தகன கிரியைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like