ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையை கூட்டமைப்பினர் ஆதரிக்க வேண்டும்!

– சம்பந்தனிடம் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்து 
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் சபையில் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும்.”
– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் பயங்கரவாத எதிர்ப்புத் தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர்.
கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று நேரில் சந்தித்து மேற்படிக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
Share the Post

You May Also Like