திருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

திருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த மைதான சுற்றுமதில் அமைப்பதற்காக முப்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

அடிக்கல் நாட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.இதன் போதான படங்களை கீழே காணலாம்.

Share the Post

You May Also Like