தெல்லிப்பழை சிவனுக்கு அன்னதான மடம் அமைப்பதற்கு மாவை எம்.பி. நிதி ஒதுக்கீடு!

தெல்லிப்பழை கிழக்கு சிவன் ஆலயத்துக்கு அன்னதான மடம் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும் அன்னதான மடத்துக்கான அடிக்கல்லை நேற்று வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி செயலாளருமாகிய சோ.சுகிர்தன் முதற்கல்லை நாட்டிவை;த்தார்.

இந்நிகழ்வில் வலி.வடக்கு பிரதேச செயலர் சிவசிறி, ஊர் பொதுமக்கள், ஆலய பக்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமையுடன் அடிக்கல்லையும் நாட்டிவைத்தனர்.

பிரதேச மக்களால், அந்தப் பிரதேசத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்பாட்டாளர் அனுசன் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவால் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Share the Post

You May Also Like