வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜால் கிளானை வி.க.வுக்கு சொந்த நிதியில் உபகரணங்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் அளவெட்டி வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசசபை உறுப்பினர் செ.விஜயராஜால் தனது சொந்த நிதியில் கிளானை இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

கிளானை மாதர்சங்கத்தினர் பிரதேசசபை உறுப்பினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த விளையாட்டு உபகரணங்கள் அவரால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் கலந்து சிறப்பித்தமையுடன், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.

லயன் செ.விஜயராஜ் தனது சொந்த நிதியில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள் என பல செயற்றிட்டங்ளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like