வவுனியாவில் ‘திறன் வகுப்பறை’ திறப்பு விழா நிகழ்வு!!

வவுனியா கூமாங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (ஸ்மாட் கிளாஸ் றூம்) திறந்து வைக்கும் நிகழ்வு பாடசலையின் அதிபர் எஸ். பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு திறன் வகுப்பறையை திறந்து வைத்தார்.

நிகழ்வின் முன்னதாக விருந்தினர்கள் பாண்ட் வாத்தியம் முழங்க பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

நிகழ்வில் மாணவத் தலைவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

Share the Post

You May Also Like