ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்தும் வடக்கு ரீதியிலான விளையாட்டு விழா! – பிரதம அதிதியாக சுமந்திரன் எம்.பி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக், வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட உப லீக் ஆகியவற்றின் அனுமதியுடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்தும் ‘வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா – 2019 ‘ நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக மைதானத்தில் கழகத்தின் தலைவர் சே.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் கலந்துகொள்வார்.

சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா.அரியகுமார், மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், மருதங்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.திரவியராசா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கெளரவ விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வே.பிரசாந்தன், ஆழியவளை சி.சி.த.க. வித்தியாலயத்தின் அதிபர் க.பாஸ்கரன், இலங்கை உதைப்பந்தாட்ட பிரதி செயலாளர் அ.அருளானந்தசோதி, பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் தலைவர் மா.நவநீதமணி, யாழ்.மாவட்ட உதைப்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளர் பா.முகுந்தன், வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட உப லீக் பொருளாளர் வே.சசிகாந் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெறும். புதுக்குடியிருப்பு சுப்பர்ராங் விளையாட்டுக்கழகமும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகமும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

Share the Post

You May Also Like