வவுனியா வைத்தியசாலையில் வெளிநாட்டு அகதிகளுக்கு சிகிச்சை

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேர் இவ்வாறு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டனர்.

சுமார் இரண்டு மணிநேரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் இவர்களுடன் வைத்தியசாலைக்கு  சென்றிருந்தனர்.

உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இரண்டு கட்டமாக அழைத்து வரப்பட்டு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள குறித்த அகதிகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்கத் தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like