செல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்!

வவுனியாவில் ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கான கடின பந்து பயிற்சி திடல் மற்றும் அலுவலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் இந்த திடல் திந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய விளையாட்டு கழகத்தின் தலைவர் யுவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கம்பரலிய திட்டத்தின் கீழ் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பயிற்சித் திடல் மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like