மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலத்தின் வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்தார் சாந்தி எம்.பி.

கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற தேசிய வேலைத்திட்டம் 2016 – 2020 இன் கீழ் மு/ ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி மற்றும் பெண் ஆசிரியர்களுக்கான தங்குமிட விடுதியும் கல்வி அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட பிரதினியாக நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களினால் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், கெளரவ ஜனாதிபதி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் போதைப்பொருள் கடத்தியே போராட்டத்தை முன்னெடுத்தார் என கூறியதை முற்றுமுழுதாக நிராகரித்ததுடன், கடந்த 30 வருடமான தமிழின விடுதலைக்கான போராட்ட காலப்பகுதியில் மதுபான சாலைகளோ, கஞ்சா போன்ற போதைப் பொருள் வர்த்தகமோ அல்லது கள்ளச்சாராய கடத்தல்களோ இடம்பெற்றிருக்கவில்லை என உறுதிபட தெரிவித்ததுடன், ஜனாதிபதி அவர்கள் வே.பிரபாகரன் மீது சுமத்திய குற்றச்சாட்டினை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்..
அத்துடன் ஜனாதிபதியினுடைய முகவர்கள் பலரே மதுபான சாலைகளை நடாத்தி வருவதையும் அங்கே அவர் கருத்து தெரிவிக்கையில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like