நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப்படும் – சிறிதரன்


நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை பெறுவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன் சார்ந்து நல்லதொரு முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி – தொண்டமான்நகர் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்ட பின், செய்தியார்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே செயற்படுவோம் என கூறினார்.

Share the Post

You May Also Like