இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு!

அம்பாறை மாவட்ட இலங்கைதமிழரசுகட்சி வாலிபர் முன்னணியினை சேர்ந்த கல்முனை இளைஞர் சட்டக்கல்லூரி மாணவன் அ.நிதான்ஷன் என்பவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் தெரிவிக்க எதிர்வரும் 12/07/2019 கொழும்பு குற்றப்புலனாய்வுக்கு சமூகம்தருமாறு இன்று 08/07/2019, அழைப்பானை பொலிசார் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை தமிழரசுகட்சியின் வாலிபர் முன்னணி அம்பாறை மாவட்டம் சார்பாக கடந்த 29/06/2019 ல் இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் மாநாட்டில் உரையாற்றிய அ.நிதான்ஷன் என்பவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்தவேண்டும் என கடந்த மாதம் கல்முனையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் இவர் முழுமையாக களத்தில் நின்று ஒழுங்குகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like