வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் வீதியின் புனரமைப்பு பணியினை ஆரம்பித்து வைத்தார் சிறீதரன் எம்.பி

வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் வீதியின் புனரமைப்பு பணியினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று ஆரம்பித்து வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் விசேடநிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது. குறித்த வீதிக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் 1கோடியே 5இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களால் தங்களின் சிவன் ஆலயத்திற்கு இதுவரை சுமார் 20 இலட்சம் ரூபாய் நடாளுமன்ற உறுப்பினரால் ஒதுக்கப்பட்டமைக்கு நன்றியைத்தெரிவித்து கொண்டார்கள்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் பிரதேசசபை உறுப்பினர் சிவமோகன் கிராம அலுவலர் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like