கூட்டமைப்பின் உதவியின்றி அரசாங்கத்தால் செயற்பட முடியாது – சுதந்திரக் கட்சி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கத்தால் செயற்பட முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

ஜே.வி.பி.யினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.

இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அபிவிருத்தி தேவைகளுக்கான நிதியாக 50 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கத்தால் செயற்பட முடியாது.

எனவே இதனை ஐ.தே.க. – கூட்டமைப்பு அரசாங்கம் என்றே கூற வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like