ஆழியவளை சி.சி.தகவுக்கு சுமனால் ஆசிரியர் விடுதியும் கலையரங்கும்!

ஆழியவளை சீ.சீ.த.க பாடசாலையில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் 70 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவில்  அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதியும்  திறந்த வெளி கலையரங்கும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் நேற்று திறந்துவைக்கப்பட்டன.

கல்லூரிச் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தனின் சிபாரிசின் பேரில் துரித கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலைச் சமூகத்தினர், பெற்றோர், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like