வல்வெட்டி இளைஞர் விளையாட்டு கழகத்துக்கு சுமனின் நிதியில் விளையாட்டுப் பயிற்சி அறை!

 வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர். கணேசரத்தினம் பிறேம்நாத் ஞாபகார்த்த மென்பந்தாட்ட சுற்றுத்தொடர் இறுதிநாள் நிகழ்வு நேற்று வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

அவர்களின் துரித கிராம அபிவிருத்தி திட்ட நிதிமூலம் புணரமைக்கப்பட்ட விளையாட்டு பயிற்சி அறையும் திறந்து வைக்கப்பட்டது

அத்துடன் இந்த விளையாட்டுக் கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் சிபாரிசுக்கமைவாகத் துரித கிராமிய அபிவிருத்தி நிதி ஊடாக அமைக்கப்பட்ட விளையாட்டுப் பயிற்சி அறையையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எவ்.எக்ஸ்.குலநாயகம் மற்றும் மதகுரு, பொதுமக்கள், விளையாட்டுக்கழகத்தினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like