யாழ்.லவ்லி திறப்பு நிகழ்வில் மாணவர்களுக்கு உதவித் திட்டம்!

சாவகச்சேரி லவ்லி நிறுவனத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு அதேதினத்தில் யாழ்.நகரில் பண்ணை கடற்கரைச் சந்தியில் லவ்லி கிறீம் ஹவுஸ் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.

புதிய சுதந்திரன், தமிழ் சி.என்.என். ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த நிலையத் திறப்பு நிகழ்வு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்குப் பிரதமவிருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா கலந்துகொண்டு வியாபார நிலையத்தைத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஞா.ஸ்ரீநேசன், ஈ.சரவணபவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சாவகச்சேரி நகர சபையினுடைய நகர மாதா சிவமங்கை, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் த.நடனேந்திரன், சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் வாமதேவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான அ.பரஞ்சோதி, ச.சுகிர்தன், கே.சயந்தன், பா.கஜதீபன் மற்றும் மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைகளின் உறுப்பினர்கள், யாழ்.மாநகரசபையினுடைய ஆணையாளர் த.ஜெயசீலன், மாநகர சபையினுடைய பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள், கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் கிருபாகரன், தொழிலதிபர் சுகந்தன் உட்பட பல தொழிலதிபர்கள்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் பெ.கனகசபாபதி, நிர்வாகச் செயலாளர் எவ்.எக்ஸ்.குலநாயகம், வர்த்தகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் வழங்கப்பட்டமை சிறப்பாகும்.

 

Share the Post

You May Also Like