நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பூங்காவிற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான துரித ஊரெழுச்சி அபிவிருத்தி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் 10 இலட்சம் (1 மில்லியன்) நிதி ஒதுக்கீட்டில் நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான சிறுவர் பூங்காவிற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு நேற்று கல்லூரி அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமாகிய கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன், யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும் விருந்தினர்களாக யாழ் மாநகரசபையின் பிரதி முதல்வர் து.ஈசன் அவர்கள், அப்பகுதி கிராம சேவையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post

You May Also Like