வெல்லாவெளியில் ஒரே நாளில் 07 செயற்திட்டங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் போராதீவுப்பற்றுப் பிரதேசசபைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டும், செயற்படுத்தப்பட்ட வேலைப்பாடுகள் இன்றைய தினம் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டும் உள்ளன.

போராதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் யோ.ரஜனி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் 07 செயற்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் பிரதேசசபை உபதவிசாளர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களால் போரதீவுப்பற்று வெல்லவெளி பிரதேச சபைக்குட்பட்ட சுரவணையடியூற்று கொங்கிறீற்று வீதிக்காக 15 லெட்சம், தும்பங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு 10 லெட்சம், கொங்கிறீற்று வீதிக்கு 15 லெட்சம், இளைஞர் விவசாயத் திட்ட கொங்கிறீற்று வீதிக்கு 15 லெட்சம், காந்திபுரம் கொங்கிறீற்று வீதிக்கு 15 லெட்சம், பிள்ளையார் ஆலயத்திற்கு 04 லெட்சம், விளாந்தோட்டம் கொங்கிறீற்று வீதிக்கு 15 லெட்சம், வைரவர் ஆலயத்திற்கு 04 லெட்சம், 35ம் கிராமம் கண்ணபுரம் மாரியம்மன் கோவில் சுற்று மதிலுக்காக 03 லெட்சம், 38ம் கிராமம் நவகிரிநகர் கண்ணகி அம்மன் கோவில் புனரமைப்புக்கு 07 லெட்சம் என ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில் சுரவணையடியூற்று கொங்கிறீற்று வீதி, தும்பங்கேணி கொங்கிறீற்று வீதி ஆகியவற்றுக்கான வேலைப்பாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட ஆலயங்களுக்கான புனரமைப்பு வேலைப்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இளைஞர் விவசாயத் திட்ட கொங்கிறீற்ற வீதி, காந்திபுரம் கொங்கிறீற்று வீதி என்பன மக்கள் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like