அளவெட்டி அரசடி ஞானவைரவர் ஆலயத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் நீர்த்தாங்கி அமைக்கப்பட உள்ளது.
வலி.வடக்கு பிரதேசசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அளவெட்டி வட்டார உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி பொருளாளருமாகிய லயன் செ.விஜயராஜின் வேண்டுகோளுக்கு அமையவும் வலி.வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமையவுமே நாடாளுமன்ற உறுப்பினரால் நீர் தாங்கி அமைப்பதற்கு 5 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நீர்தாங்கிக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.