கூட்டமைப்பு மீதுள்ள ஆதரவைவிட மஹிந்த மீதான வெறுப்பே தமிழர்களுக்கு அதிகம் – சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள ஆதரவைவிட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தின் மீதான வெறுப்பே தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளதாக அக்கட்சியின் ஊடக பேச்சாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவேண்டுமாகவிருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு அரசியல் அமைப்பு ஊடாக உறுதிசெய்யப்பட வேண்டும்.

ஒக்டோபர் புரட்சியின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைதியாக இருந்திருந்தால் அதனால் பாதிக்கப்படபோவது தமிழ் மக்களே. மேலும் இந்த அரசாங்க காலத்தில் எதுவும் நடைபெறவில்லையென யாரும் கூறமுடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like