எமது ஆட்சி உரிமை எமக்கு வேண்டும் அதற்காகவே அரசுக்கு எமது ஆதரவு! ரணில்முன் தெளிவுபடுத்திய சுமந்திரன்

தமிழரின் அபிலாஷை விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை பகிரங்கப்படுத்துமாறு பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை எங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காவே கூட்டமைப்பு கடந்த நான்கு வருடங்களாக ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ். குருநகர் பகுதியில் நவீன வசதிகளுடன் அமையவுள்ள புதிய துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று(வியாழக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் யாழில் வைத்து ஜனாதிபதி வேட்பாளராக அல்ல ஒரு கட்சியின் தலைவராக நாங்கள் உங்களிடம் கேட்கவிருப்பது எங்களது அபிலாஷை குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன. இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like