கூட்டமைப்பின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார் விஜயகலா!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிவரும் ஆதரவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வலி வடக்கில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் மக்களிடம் கையளித்திருக்கின்றார்கள்.

அதற்கும் அப்பால் உட்கட்டமைப்பு வீதிகளை நாங்கள் புனரமைத்துக் கொடுத்திருக்கின்றோம். அதற்கும் அப்பால் எங்கள் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக அதிகளவான வீட்டுத்திட்டங்களை வழங்கியுள்ளோம்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இந்த இடத்திலே நன்றி கூற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like