மயிலிட்டியில் மக்கள் முற்றிலுமாக குடியேற்றப்பட வேண்டும் – மாவை எம்.பி.

மயிலிட்டி மண்ணுக்குரிய மக்கள் முற்றிலும் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இல்லாவிடின் மயிலிட்டி துறைமுகம் திறக்கப்பட்டமைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றும் மாவை சேனாதிராஜா  சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (வியாழக்கிழமை) மயிலிட்டி துறைமுகத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த பகுதியில் ஒருபகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டாலும் விவசாய நிலங்கள் உட்பட பல பகுதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

குறித்த நிலங்களை விரைவில் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

Share the Post

You May Also Like