உருத்திரபுரம் சிவநகர் தேவாலயத்திற்கு சிறி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் தேவாலயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த தேவாலயத்தின் வேலைகள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

தேவாலயத்தின் அருட்தந்தை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு முதலில்  பங்குத்தந்தையின் விசேட ஆராதனைகளுடன் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் அருட்தந்தைமார் அருட்சகோதரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டன.
Share the Post

You May Also Like