சங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி!

சங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் 5 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு முன்பள்ளியினரின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களின் குடிதண்ணீர் தேவையை நிறைவுசெய்வதற்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிதண்ணீர் வசதிகளை ஏற்டுத்தும் ஆரம்பப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like