இயக்கச்சி முள்ளிப்பற்று உப.அலுவலகத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப.அலுவலகம் அதனுடன் இணைந்த நூலகம் ஆயுள்வேத வைத்தியசாலை என்பன நான்கு மில்லியன் ரூபாய் மாகாண குறுத்தொதுக்கப்பட்ட நிதி மற்றும் 3.4 மில்லியன் உள்ளடங்கலாக சுமார் 7.4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டடத்தின் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் நடைபெற்றுள்ளது

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்தினை திறந்து வைத்தனர்.

நிகழ்வில் பூநகரி கரைச்சி பச்சிலைபள்ளி பிரதேச சபைகளின் தவிசாாளர்கள், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like