கொண்டடி வீதியை திறந்து வைத்தார் முதல்வர் ஆனல்ட்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான துரித ஊரெழுச்சி அபிவிருத்தி (கம்பரெலிய) திட்டத்தின் யாழ் மாநகர முதல்வரின் சிபாரிசில் குருநகர் கொண்டடி வீதி  புனரமைக்கப்பட்டது.

புனரமைக்கப்பட்ட வீதியை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காக (21) யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர் கௌரவ மேரி அஞ்சலா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி குருநகர் கிளை உறுப்பினர்கள், அப் பகுதி பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like