முதலிக்குளம் வீதிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான துரித ஊரெழுச்சி அபிவிருத்தி (கம்பரெலிய) திட்டத்தில் யாழ் மாநகர முதல்வரின் சிபாரிசில் ஈச்சமோட்டை முதலிக்குளம் வீதி புனரமைப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குறித்த வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அடிக்கல் நாட்டி புனரமைப்பு பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் முதல்வரின் வட்டார இணைப்பாளர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஈச்சமோட்டை கிளை உறுப்பினர்கள், அப் பகுதி பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like