எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர ஐ.ம.சு.மு வுக்கு உரிமை இல்லை

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த உரிமை கிடையாது என ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்காக உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் காரணமாக அமையாது. சட்டத்திலும் அதற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ​வேண்டும் என ஒன்றி ணைந்த எதிரணி கோருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர்,

ஐ.ம.சு.மு எம்.பிகளாக தெரிவானவர்களே இன்று எதிரணியில் அமர்ந்திருக்கிறார்கள்.அவர்களால் எதிர்க்கட்சி தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கோர முடியாது.

ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தலைமையில் கூடி ஆராய்ந்த போது தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு வழங்க முடிவு செய்யப்பட்டது.ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் சு.க மத்திய குழுவும் இது தொடர்பில் முடிவு எடுத்தது.

ஆனால் ஒரு குழுவினர் எதிர்க்கட்சியில் அமர அனுமதி கோரினார்கள்.அதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.

ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்ட உரிமையை அவர்கள் தவறாக பயன்படுத்தினார்கள்.தனிக்கட்சி அமைக்க அவர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

சகல ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் தரப்பில் அமர வேண்டும் என அன்று முடிவு செய்திருந்தால் இன்று எதிரணியில் உள்ள பலருக்கு பாராளுமன்றம் செல்ல கிடைத் திருக்காது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை கிடையாது என்றார்.

தேசிய அரசு தொடருமா?

2020 வரை தேசிய அரசில் இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் மத்திய குழு தான் முடிவு செய்யும். அதற்கு முன்னர் வெளியேற மத்திய குழு முடிவு செய்தால் நாம் எதிரணியில் அமரத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இல் சு.க ஜனாதிபதி ஒருவரையும்யும் சு.க அரசையும் உருவாக்கும் நோக்கத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர்,2020 ற்கு முன்னர் சு.க ஆட்சி அமைவதை நாம் விரும்புகிறோம்.

அதற்கு உக்ந்த அடிப்படை இருக்கவேண்டும்.இரு தரப்பும் தொடர்ந்து இணைந்து செயற்படவே முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Share the Post

You May Also Like