கல்முனை துளிர் கழகத்தின் மாபெரும் இரத்த தான முகாம்

கல்முனை துளிர் கழகத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமரத்துவம் அடைந்த கழக அங்கத்தவர் லோஷாந்த் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவாகவும் கல்முனை துளிர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம் கல்முனை இராம கிருஸ்ண மஹா வித்தியாலயத்தில் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி Dr.Ramesh மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்புடன்
10.03.2018 காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 வரை இடம்பெற்றது.

இது கல்முனை பிரதேசத்தின் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றிய அங்கத்தவர்கள் பிரதேச விளையாட்டு கழக அங்கத்தவர்கள் துளிர் கழக அங்கத்தவர்கள் ஆலோசகர்கள் மாணவர்கள் சமூக நலன் விரும்பிகள் பிரதேச சமூக நலன் அமைப்புகள் மற்றும் பெண்கள் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் சிறப்பாக நிறைவு பெற்றது.

Share the Post

You May Also Like