நீதிச் சேவையில் பொன்விழா காணும் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் அவர்களுக்கு கௌரவிப்பு

நீதிச் சேவையில் பொன்விழாக் காணும் ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவசாகம் தலைமையில் நடைபெற்றது.
1968 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி முதல் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கடந்த 50 ஆண்டு காலமாக சட்டத்தரணி தொழிலை ஒரு சமூகத் தொண்டாகக் கருதி நீதித்துறையில் பணியாற்றி வவுனியா மண்ணுக்கும், இந்த நாட்டிற்கும் சேவையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் அவர்கள் இதன்போது பலராலும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்த்தர்கள், கல்வியலாளர்கள், வர்த்தக பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Share the Post

You May Also Like