காரைதீவில் காதம்பரி இல்லம் 149 புள்ளிகளுடன் வெற்றி வாகை

காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் நேற்று (10) நடைபெற்றது.

போட்டியில் 149புள்ளிகளைப்பெற்ற காதம்பரி இல்லம் முதலிடத்தைப்பெற்று வெற்றிவாகை சூடியது.

காதம்பரி இல்லம் இவ்வாண்டுக்கான சாம்பியனாகத் தெரிவானது. சாம்பியன்கிண்ணத்தை இல்லத்தலைவி சகா.டிவானுஜா பிரதமவிருந்தினரான கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீலிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

காதம்பரி இல்லம்(நீலம்) 149புள்ளிகளுடன் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை 135புள்ளிகளுடன் தாகூர்மணி இல்லமும் (மஞ்சள்)பெற 130புள்ளிகளைப்பெற்ற சாரதாமணி இல்லம் (பச்சை)மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

இல்லச்சோடனையில் சாரதாமணி இல்லம் முதலிடத்தையும் அணிவகுப்பில் தாகூர்மணி இல்லம் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது.

Share the Post

You May Also Like