இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” நாளை முதல் வெளியீடு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழா நாளை 14ம் திகதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் , மதகுருமார்கள், இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

தமிழரசுக்கட்சியின் தலைவர்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமன்றி நாளைய தினம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வுகள் இட்ம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தை செல்வாவின் காலத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் ‘சுதந்திரன்’ என்ற பெயரில் ஈழத்திலிருந்து  ஒரு பத்திரிகை  வெளியான து .  சுதந்திரனின் முதல் இதழ்   1947 ம் ஆண்டு  ஜூன் 1ம்திகதி அன்று வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 – 1961 காலத்தில் எஸ். டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. இனக்கலவரத்தை அடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் இந்தப்பத்திரியை வெளியீடு 1983 இறுதியில் நிறுத்தப்பட்டது.
 
35 வருடங்களின் பின்னர்  தற்போது அது புதிய பரிணாமத்தில்’ புதிய சுதந்திரன்’ எனும் பெயரில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like